2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

திருட்டு 'ஹலோ'வுக்கு ஆப்பு

George   / 2016 ஜூன் 01 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 சிறைச்சாலைகளில் திருட்டுத்தனமாக கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்பற்ற 39 அலைபேசிகள் மற்றும் 787 சிம் அட்டைகளை அழித்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் அருணி ஹெட்டிகல, இன்று புதன்கிழமை(01) பிறப்பித்துள்ளார்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கைப்பற்றப்பட்ட 18 அலைபேசிகள், 127 சிம் அட்டைகள் மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைப்பற்றப்பட்ட 19 அலைபேசிகள், 243 சிம் அட்டைகள் உட்பட அனைத்து சிம் அட்டைகளையும் அழித்துவிடுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .