2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தேரர்களுக்கு விளக்கமறியல்

George   / 2016 பெப்ரவரி 01 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம நீதிமன்றத்துக்கு முன்னால் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், பொலிஸாரிடம் திங்கட்கிழமை சரணடைந்த இரண்டு பிக்குகளையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம  மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தவிட்டுள்ளார். 

சிஹல ராவய அமைப்பின் பொதுச் செயலாளரான மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் படல்குபுரே அரியஷாந்த தேரர் ஆகிய இரு பிக்குகளுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 பிக்குகள், நாளைய தினம் சரணடையவுள்ளதாக சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X