2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தேரரின் செருப்பு, கட்டில் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2016 மே 05 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை, பம்பஹின்ன, புவக்கஹாவெல பிரதேச மலையொன்றில் ஏற்பட்டுள்ள மண்சரிவின் போது காணாமல் போன பௌத்த தேரர் அணியும் பாதணிகளில் ஒன்றும், அவர் பயன்படுத்திவந்த கட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மலையடிவாரத்தில் உள்ள கற்குறையொன்றுக்குள்ளேயே மேற்படி தேரர் வசித்துள்ளார் என்றும், இந்நிலையிலேயே மண்சரிவின் போது அவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேரரிச் பாதணி, மேற்படி கற்குகையிலிஐந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவிலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேரரை இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையால், தொடர்ந்து தேடுதலை நடத்துவதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இருந்த போதிலும் முடிந்தளவுக்கு தேடுதலை நடத்தி வருவதாகவும் பாதுகாப்பு தரப்பினர் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X