Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெலும் பண்டார
'கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்ட அதே வடிவத்திலிருந்தே மீளவும் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், இந்தத் திட்டம் இடைநிறுத்தப் பட்டதற்கான உறுதியான காரணம் எதுவுமில்லை. எமது கருத்தின்படி இது, குறுகிய நோக்கம் கொண்ட அரசியல்' என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தின்போது இத்திட்டத்தை நிறுத்துவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும், இதனால் இலங்கையுடனான சீனாவின் உறவு பாதிக்கப்பட்டதுடன் இலங்கையில் எதிர்கால சீன முதலீடுகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், இலங்கையின் பொருளாதாரத்துக்குப் பாரிய தாக்கம் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வருடம் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, முன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்த மேற்படி திட்டமானது, ஜனவரி 8ஆம் திகதி நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர், புதிய விதிமுறையின் படி, இந்தத் திட்டத்தின் சுற்றுச் சூழல் பாதிப்புக்கள், ஏனைய சட்ட ஆட்சேபனைகளின் மீளாய்வுக்காக புதிய விதிகளின்படி இத்திட்டமானது இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எதிர்வரும் மாதத்தில் இத்திட்டத்தை, அரசாங்கமானது மீள ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தலைமையிலான இராஜதந்திரிகள் குழுவொன்று, கடந்த வெள்ளிக்கிழமை (04), இலங்கைக்கான சீனத்
தூதுவர் யி ஸியான்லியாங்கை சந்தித்திருந்தது.
இந்நிலையிலேயே, 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு அரசாங்கம் அனுமதியளிக்க தீர்மானித்துள்ள நிலையில், அரசாங்கம் மாறியமையை அடுத்து மேற்படி திட்டம் இடைநிறுத்தப்பட்டமையால் நாளொன்றுக்கு 360,000 அமெரிக்க டொலர்கள், சீன நிறுவனத்துக்கு நட்டம் ஏற்பட்டதாக இணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
அதிநவீன உபகரணங்களை நகர்த்தியதாலேயே, தினமொன்றுக்கு, இவ்வாறான பாரிய நட்டம் ஏற்பட்டதாக மேற்படி இராஜதந்திரக் குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
34 minute ago