Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு அரசாங்கம், பச்சைக்கொடி காட்டுவது நிச்சயமாகிவிட்டது. எனினும், பழைய ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் செய்யப்படும். கடலிலிருந்து மீட்கப்படும் நிலத்தின் அளவைக் குறைப்பதும், மீட்கப்பட்ட நிலத்தில் சிறிதேனும் சீனாவுக்கு இலவசமாகக் கொடுக்கப்படமாட்டாது என்பதும் இந்த திருத்தங்களில் அடங்குவதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர், நேற்று திங்கட்கிழமை (22) தமிழ்மிரருக்கு தகவல் வெளியிட்டார்.
முன்னைய ஒப்பந்தத்தின் படி 233 ஹெக்டேயர் நிலப்பகுதி கடலிலிருந்து மீட்கப்படவிருந்தது. 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் சீனக் கம்பனிக்கு 108 ஹெக்டேயர் கொடுக்கப்படும். இதில் 20 ஹெக்டேயர் கட்டணமின்றிக் கொடுப்பது, மீதமானவை 99 வருட குத்தகையில் சீனாவுக்கு கொடுப்பது முன்னைய ஒப்பந்தத்தில் இருந்த விடயங்களாகும்.
எனினும் புதிய அரசாங்கம், பழைய ஒப்பந்தத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதில் ஈடுபட்டுள்ளது. பிரதமார் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள முன்னர் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக்; சமரவிக்ரம மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க சீனாவுக்கு செல்லவுள்ளனர்.
துறைமுக நகர செயற்திட்டம், ஹம்பாந்தோட்டை பொருளாதார வலயம் அமைத்தல் உட்பட பல விடயங்;களையிட்டு தான் அங்கு பேசவுள்ளதாக சமரவிக்ரம தெரிவித்தார்.
கப்பல் கட்டும் செயற்திட்டத்துக்கு சீன கம்பனி ஒன்று 1000 ஏக்கர் நிலம் கேட்டுள்ளதாக பிரதமர் முன்னர் கூறியிருந்தார். கொழும்பு துறைமுகம் பற்றிக் கேட்டபோது, நாம் இதை எவ்வாறு முன்னெடுப்போம் என்பதையிட்டு பேசுவோம் என அவர் கூறினார்.
இந்த திட்டம் தொடர்பாக சம்மதித்துள்ள போதும் பழைய ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மீட்கப்பட்ட நிலத்தில் எதனையும் சீனாவுக்கு இலவசமாக கொடுப்பதை நாம் விரும்பவில்லை. சுற்றாடலுக்கு கெடுதி வராதிருக்க மீட்கப்படும் நிலத்தில் அனைவரையும் நாம் குறைக்கும் நோக்கில் உள்ளோம் எனவும் பிரதமர் கூறினார்.
இந்த செயற்றிட்டம், 2014இல் முன்னைய அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட நிகழ்வில் சீன ஜனாதிபதியும் கலந்துகொண்டார். ஆயினும், பல முறைகேடுகள் இருப்பதாக கூறிய புதிய அரசாங்கம், இந்த செயற்றிட்டத்தை நிறுத்தி வைத்தது. இவ்வாறு நிறுத்தியதால் நாள் ஒன்றுக்கு 380,000 அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்படுவதாக சீனக் கம்பனி கூறியுள்ளது.
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago