2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தீ விபத்துக்கு இரசாயனப் பொருட்களின் கசிவே காரணம்

Princiya Dixci   / 2016 மே 05 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில், நேற்று புதன்கிழமை (04) இரவு தீ விபத்து ஏற்பட, அக்கூடத்தில் ஏற்பட்ட இரசாயனப் பதார்த்தங்களின் கசிவே, காரணமாக அமைந்தது என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

மொரட்டுவை, கட்டுப்பெத்தயில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குச் சொந்தமான கட்டடம், நேற்று இரவு 7.20க்கு தீப்பற்றி எரிந்தது. 

குறித்த கட்டடத்தின் இரண்டாவது மாடியில் திடீரென ஏற்பட்ட இந்தத் தீயை, மொரட்டுவை, கல்கிஸை மற்றும் தெஹிவளை நகரசபைக்குச் சொந்தமான ஐந்து தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகப் பொலிஸார் கூறினர். 

இதனால், மேற்படி ஆய்வுகூடம், முற்றாக எரிந்துள்ளது என்றும் இதனால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னமும் அளவிடப்படவில்லை என்றும் கூறிய பொலிஸார், சம்பவத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இத்தீவிபத்து தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் தொடர்ந்து விசாரணகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X