2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

George   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒக்டோபர் மாதம் வெயாங்கொடை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தகல பிரதேசத்தில்   வசித்த 45 வயதுடை நபரை கூரிய ஆயுதத்தால்  வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடை சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை வெயாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவரின் மனைவி மற்றும் மற்றுமொரு சந்தேகநபரை  தேடிவரும் பொலிஸார், அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலக்கம் 198ஃ4 மொட்டுன்ன, வெயாங்கொடை எனும் முகவரியில் வசிக்கும் பொத்துபிட்டிகே தனுஷ்க பெர்ணான்டோ (வயது 29) சந்தேகநபர் மற்றும் இலக்கம் 88, கல்கமுவை, வெயாங்கொடை எனும் முகவரியில் வசிக்கும் அந்தார கமகே வசந்தி லக்மாலி (வயது 30) என்ற பெண் ஆகியோரையே பொலிஸார் தேடி வருகின்றனர்.

இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0332287222, 0332287223 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 0718591624 எனும் அலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .