2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

தங்கத்தின் விலையில் எதிர்பாராத மாற்றம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 28 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (28) தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.

24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாயாக பதிவாகி உள்ளது.

அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாயாக குறைந்துள்ளதாகவுமு் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரங்களில் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 400,000கடந்த நிலையில் தற்போது சுமார் 80,000 வரை குறைந்துள்ளது.

​நான்கு இலட்சம் என்ற உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை, இனி பழைய நிலைக்கு திரும்பாது என தெரிவிக்கப்பட்ட போதிலும், தற்போது 22 கரட் தங்கம் மூன்று இலட்சத்திலிருந்து குறைந்துள்ளமை சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .