2025 ஜூன் 07, சனிக்கிழமை

தேசிய பொசன் வாரம் இன்று ஆரம்பம்

Freelancer   / 2025 ஜூன் 07 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பொசன் வாரம் இன்று (07) ஆரம்பமாகிறது. அதன்படி, தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

மேலும் தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித தலங்களை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

தேசிய பொசன் விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் கே.பி.ஆர்.விமலசூரிய தெரிவித்தார். 

போசன் காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், அனுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகவும், வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ள இடங்கள், தானசாலைகள் (தன்சல்) நடைபெறும் இடங்கள், முதலுதவி மையங்கள் உள்ள இடங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த செயலியை அறிமுகப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக கே.பி.ஆர். விமலசூரிய மேலும் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .