2026 மே 19, செவ்வாய்க்கிழமை

தொட்டலங்கவில் தாக்குதல்: வீதியில் கிடந்த நபர் உயிரிழப்பு

Editorial   / 2026 மே 19 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, தொட்டலங்க  பாலத்திற்கு அருகில் பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில், அந்தப் பெண்ணின் இரு மகன்கள் நடத்திய தாக்குதலுக்குள்ளாகி, அதே இடத்தில் இரண்டு நாட்களாக விழுந்து கிடந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார்   தெரிவித்துள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வாலிபராவார். கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதியன்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் போதையில் வந்து சந்தேக நபரின் தாயாரைத் திட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட கோபத்தில், சந்தேக நபரும் அவரது சகோதரரும் இணைந்து அந்த நபரைத் தாக்கியுள்ளமை முதற்கட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரான சகோதரரைக் கைது செய்வதற்காகக் கிரேண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X