2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் நாடு திரும்பினர்

Janu   / 2025 மே 08 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை இளைஞர்கள் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பால் ( International Organization for Migration ) மீட்கப்பட்டு புதன்கிழமை (07)  காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

 வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இலங்கை அரசாங்கம், தாய்லாந்து மற்றும் மியான்மர் அரசாங்கங்களுடன் நடத்திய இராஜதந்திர நடவடிக்கையை தொடர்ந்து, இந்த இளைஞர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

 இந்த 15 பேரும் மியான்மரின் மியாவாடியில் உள்ள சைபர் முகாமில் இருந்து மீட்கப்பட்டு,  தாய்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.  

அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொண்டு வரும் பொறுப்பை  சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) ஏற்றுக்கொண்டுள்ளது.

 விடுவிக்கப்பட்ட அனைவரும் புதன்கிழமை (7) அன்று மாலை  கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பட்டுள்ளனர். 

டி.கே.ஜி. கபில


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X