2025 மே 03, சனிக்கிழமை

தடாகத்தில் நீராடிய கொரியர் மரணம்

Editorial   / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரிய நாட்டு பிரஜை​யொருவர்  நீச்சல்தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த போது மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் வாதுவ மொல்லிகொட பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலிலேயே திங்கட்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.

அந்த கொரிய பிரஜை 43 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 நீச்சல் தடாகத்தில் குப்புற கவிழ்ந்து இருந்த நிலையில் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X