2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தடுப்பூசி பெறாதவர்களை கண்டறிய கணக்கெடுப்பு

J.A. George   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர்கள் ஊடாக கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து அவர்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளப்படவுள்ளன.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தகவல்களை பெற்றுக்கொண்ட பின்னர், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை தடுப்பூசி மத்திய நிலையங்களுக்கு அழைத்துவந்து அல்லது அவர்களது வீடுகளுக்கு சென்று தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னடுக்கப்படும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட பலர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என சுகாதார அமைச்சுக்கு கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X