Freelancer / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய கொரோனா மாறுபாடான ஒமிக்ரோனுக்கு எதிராக தடுப்பூசி மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு மிகவும் குறைவு என, இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்தது.
அச்சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்ன, நேற்றையதினம் (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒமிக்ரோன் மாறுபாடு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஒவ்வொரு தொற்றுநோய் சூழ்நிலையும் அவ்வப்போது நேரத்துக்கு நேரம் மாறிக்கொண்டே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய மாறுபாடு, வைரஸின் முந்தைய மாறுபாடுகளைக் காட்டிலும் அதிகமாக பரவக்கூடியது என்றும், அது குறிப்பிட்ட அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியைக் கடந்து செல்லக்கூடியது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் என்றபோதிலும், கோட்பாடுகள் உண்மையென இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் அடிக்கோடிட்டுக் கூறினார்.
புதிய மாறுபாடு தொடர்பில் முழு உலகமும் மிகவும் கவலையடைந்துள்ளது உண்மைதான், இலங்கையும் அவ்வாறே உள்ளது. நாங்கள் இன்னும் சிக்கலில் இருந்து வெளியேறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே, தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களும் அடிப்படை சுகாதார நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பூஸ்டர் வலுப்படுத்துவதால், தகுதியுள்ள நபர்கள் தாமதமின்றி சரியான நேரத்தில் பூஸ்டரைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
14 minute ago
26 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
26 minute ago
31 minute ago
39 minute ago