Freelancer / 2021 ஓகஸ்ட் 28 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அதிகாரிகள் தடுப்பூசிகளை கொடுக்காமல் வளாகத்தை விட்டு வெளியேறியதால், காலி தொடந்துவவில் உள்ள தடுப்பூசி மையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
தடுப்பூசி போடப்படாத போது தடுப்பூசி போடப்பட்டதாக தங்கள் தடுப்பூசி அட்டையில் குறிக்கப்பட்டுள்ளதால் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பின்வரும் விளக்கத்தை வெளியிட்டார்.
ஹிக்கடுவ தடுப்பூசி மையத்தில் நடந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணையின் அடிப்படையில் தெரிய வருவதாவது, தடுப்பூசி போட முன்னுரிமை கோரிய 2 குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
வரிசையில் காத்திருந்த சிலர், தங்களுடைய தடுப்பூசி அட்டைகளுக்காக காத்திருந்திருக்கிறார்கள், ஏற்கனவே அட்டைகள் நிரப்பப்பட்டுள்ளன.
ஒரு பெரிய மோதலைத் தவிர்ப்பதற்காக, சுகாதார அதிகாரிகள் தடுப்பூசி போடுவதை நிறுத்திவிட்டு, அட்டைகள் ஏற்கனவே நிரப்பப்பட்டிருந்தாலும் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு தடுப்பூசி வழங்காமல், உபகரணங்களை பொதி செய்துள்ளனர்.
இந்த கிராமத்தில் உள்ளவர்கள் உட்பட ஒவ்வொரு குடிமகனும் தடுப்பூசியை தடையின்றி அணுக முடியும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
தடுப்பூசி இயக்கத்தில் கலந்து கொள்பவர்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் நலன் கருதி அதிகாரிகளை திறமையாக நிர்வாகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago