2025 மே 21, புதன்கிழமை

தண்ணீர், மின்சார கட்டணம் அதிகரிக்கப்படாது: ரவி

Kanagaraj   / 2015 நவம்பர் 26 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வற் வரி திருத்தம் காரணமாக தண்ணீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கும் என்பது பொய்யாகும் என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

11 சதவீதமான வற் வரி 12.5 சதவீதம் மற்றும் 8 சதவீதமான வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனூடாக மொத்த மற்றும் சில்லறை வர்த்தகர்கள் முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். தண்ணீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவைகளுக்கு வற் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மூன்று கட்டணங்களும் அதிகரிக்கும் என்று கூறுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X