Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2025 ஜூலை 09 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தண்ணீர் கேன் போடுவதாக கணவரிடம் கூறிவிட்டு ராஜபாபு வீட்டிற்கு திஷா சென்றுவிடுவராம். நாக்பூர் நகர் தரோடி குர்த் பகுதியில் வசித்து வந்தவர் சந்திரசென் ராம்தேகே (வயது38). இவரது மனைவி திஷா (வயது 28). கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்திரசென் ராம்தேகே உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார்.
கடந்த 2 வருடமாக உடல்நலக்குறைவால் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சந்திரசென் ராம்தேகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
சந்திரசென் ராம்தேகே உயிரிழப்பில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் பொலிஸார் சந்திரசென் ராம்தேகேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் சந்திரசென் ராம்தேகேவின் மனைவியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல் வெளியானது.
அதாவது கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையான நிலையில் குடும்பத்தை நடத்துவதற்காக அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார்.
அப்போது திஷாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஆசிப் என்கிற ராஜபாபு டைர்வாலா (28) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. தண்ணீர் கேன் போடுவதாக கணவரிடம் கூறிவிட்டு ராஜபாபு வீட்டிற்கு திஷா சென்றுவிடுவராம். அப்போது இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். தண்ணீர் கேன் போடும்போதெல்லாம் நிஷா கள்ளக்காதலுடனுன் உல்லாசமாக இருந்து வருவது வழக்கமாம்.
அப்படி இருக்கையில், ஒருநாள் வெகுநேரமாகி திஷா வீட்டிற்கு தாமதாமாக வந்தாராம். வீட்டிற்கு தாமதமாக வருவது ஏன்? என்று சந்திரசென் ராம்தேகே மனைவியை கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி, இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வழக்கம்போல் திஷா மறுநாள் எழுந்து வீடுகளுக்கு தண்ணீர் கேன் போட சென்றுவிட்டார். சில நாட்களாக மனைவியின் நடவடிக்கையில் சந்திரசென் ராம்தேகவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து நிஷாவிடம் கேட்டுள்ளார். அப்போது கள்ளக்காதல் விவகாரம் பற்றி அறிந்த சந்திரசென் ராம்தேகே மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்தநிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திஷா திட்டமிட்டார். இதற்காக தனது கள்ளக்காதலன் ராஜபாபு டைர்வாலா உதவியை நாடினார். சம்பவத்தன்று கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்த திஷா அவரின் உதவியுடன் தூங்கிக்கொண்டிருந்த கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் நாடகமாடியது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பொலிஸார் கொலை வழக்குப்பதிவு செய்து திஷா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜபாபு டைர்வாலாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
19 minute ago
27 minute ago