2025 ஜூலை 16, புதன்கிழமை

தந்தையை வெட்டிக் கொன்ற மகன்கள்

Freelancer   / 2023 ஏப்ரல் 02 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தந்தையின் துன்புறுத்தலைத் தாங்க முடியாத 3 பிள்ளைகள் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவி்க்கின்றனர்.  

கைது செய்யப்பட்ட மூவரும் கொடிகாமம் மிரிசுவில் பகுதியைச் சேர்ந்த 21, 20 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரர்கள் மூவரும் சேர்ந்து கொலையை செய்து இருப்பதாகவும் கொலை செய்யப்பட்ட 44 வயதுடைய அவர்களின் தந்தை, கராத்தே சிவா என அழைக்கப்படும் சிவசோதி சிவகுமார் எனவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்களிடம் பொலிஸார் விசாரணை நடாத்திய போது,  சிறிது காலமாக தந்தையின் தொல்லை தாங்க முடியாததால் அவரை வெட்டிக் கொன்றதாக  தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X