2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தனியார் துறை குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த திட்டம்

Simrith   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.27,000 ஆக உயர்த்துவதற்காக, தற்போதுள்ள சட்டத்தை திருத்த திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தனது முகப்புத்தக பதிவில் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தினார், அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து மே மாதத்தில் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார்.

தற்போது குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21,000 ஆக உள்ளது.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்துடன் இந்த அதிகரிப்பு ஒத்துப்போகிறது என்றும், அடுத்த ஆண்டு ரூ. 35,000 ஆக மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .