2025 ஜூலை 31, வியாழக்கிழமை

தனுஷ்கோடிக்கு நீந்திய 13 வயது சிறுமி

Freelancer   / 2022 மார்ச் 21 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனை வரையான 28.5 கிலோ மீற்றர் தூரத்தை 13 மணி நேரத்தில், மும்பையைச் சேர்ந்த 13 வயதான ஓட்டிஸம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமியான ஜியா ராய்,  நீந்திக் கடந்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
கடற்படை அதிகாரி ஒருவரின் மகளான குறித்த சிறுமி, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளிடம் அனுமதியைப் பெற்ற பின்னர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.22 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கி, மாலை 5.32 மணிக்கு அரிச்சல்முனையை அடைந்தார்.

இலங்கை கடற்படை, ஜியா ராய்க்கு  சர்வதேச கடல் எல்லை வரை பாதுகாப்பு வழங்கியதுடன், அங்கிருந்து இந்திய கடலோர காவல்படை பாதுகாப்பு வழங்கியது.

ஜியா ராய் நீந்தி முடித்தபோது உடனிருந்த தமிழ்நாடு பொலிஸ் பணிப்பாளர் நாயகம் (டிஜிபி) சைலேந்திர பாபு, தங்கள் பிள்ளையை ஊக்குவித்தமைக்காக, அவரது தந்தை மதன் ராய் மற்றும் தாய் ரெஜினா ராய் ஆகியோரைப் பாராட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .