2025 மே 07, புதன்கிழமை

தன் பிள்ளைகளுக்கு நஞ்சூட்டிய தாய்

S. Shivany   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது இரு பிள்ளைகளுக்கு நஞ்சூட்டிய தம்புள்ளை-யாபான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய தாயை, மார்ச் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தம்புள்ளை மேலதிக நீதவான் இன்று(16) உத்தரவிட்டுள்ளார்.

11 மாதங்களேயான மகனுக்கும் 03 வயதுடைய பெண் குழந்தைக்கும் இந்த தாய் நஞ்சூட்டி தானும் நஞ்சை உட்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, ஆண் குழந்தை ஆபத்தான நிலையில் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், நஞ்சு உடலில் கலந்துள்ளதையடுத்து, தாயும் மகளும் தம்புள்ளை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குடும்பப் பிரச்சினையே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X