Janu / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, புதன்கிழமை (22) அன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை கடும் பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்கு 25,000 ரூபாய் ரொக்கப் பிணையும், 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையும் விதித்து நீதவான் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கை மீண்டும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறும், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழக்கு சொத்தாக நீதிமன்ற பொறுப்பில் வைக்குமாறும் அவர் மேலும் உத்தரவிட்டார்.
மேலும், சந்தேக நபரின் வெளிநாட்டு கடவுச்சீட்டை (Passport) நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026