2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘தபால்மூல வாக்களிப்பு தனியாருக்கும் வேண்டும்’

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிக்கும் சந்ர்ப்பத்தை தனியார் துறையினருக்கும் பெற்றுக்கொடுக்குமாறு கோரியுள்ளன நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கஃபே)  தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை, நேற்று(12) அனுப்பி வைத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில், பொதுத்தேர்தல், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்றத்  தேர்தல்களில் வாக்களிப்பதற்கான ஆர்வம் பொதுமக்களிடம் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.

தலை நகரம் உள்ளிட்ட ஏனைய பிரதான நகரங்களில் தனியார் நிறுவனங்களில் சேவைகளில் ஈடுபடும் நபர்கள், அவ்வாறான தேர்தல்களில் வாக்களிப்பதற்காக, தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாக்களிப்பு நிலையங்களுக்கும் தனியார் துறையினர் கடமையாற்றும் இடத்துக்கும் இடையிலான தூரத்தை கருத்திற்கொண்டு விடுமுறை வழங்கும் முறை நடைமுறையில்உள்ளது. எனினும், தூர பிரதேசங்களில் வசிக்கும் சிலர் வாக்களிப்பதற்கு மாத்திரம் பணத்தை செலவிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவது பிரச்சினைக்குரிய விடயமாகும் என, அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், தனியார் துறையினருக்கும் தபால்மூலம் வாக்களிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கஃபே) தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .