2025 நவம்பர் 01, சனிக்கிழமை

தப்பிய மரண தண்டனை கைதிக்கு விளக்கமறியல்

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷெல்ரன்

கொலைச் சம்பவமொன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்ற கைதியை,  நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மீண்டும் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, மேற்படி நபரை இன்றுவரை விளக்கமறியில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் உத்தரவிட்டார்.

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இலங்கக்கோன் திசேரா கமலதாஸ் என்பவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், தனது நண்பர்களுடன் இணைந்து, 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலகுமலை செல்லய்யா என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்பதுடன், செல்லய்யா குமாரி என்பவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அத்துடன், செல்லய்யா குசுமாவதி, செல்லய்யா ரமேஸ் மற்றும் செல்லயா சிவகுமார் ஆகியோர் மீது தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், 2016ஆம் ஆண்டு 3ஆம் மாதம் 16ஆம் திகதி இவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், தும்பர சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற மேற்படி நபரை, நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார், கொழும்பிலுள்ள பொலிஸாரின் உதவியுடன், கொழும்பில் வைத்து திங்கட்கிழமை கைதுசெய்தனர்.

மேற்படி நபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, அவரை, இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X