2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தம்புள்ளையில் சில கடைகள் உப-குத்தகைக்கு விடப்பட்டுள்ளன

Kogilavani   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள 140 கடைகளில் பல கடைகள், அரசியல்வாதிகளாலும் அவர்களது மனைவிமாரினாலும் நடத்தப்படுவதாக புத்திக பத்திரண எம்.பி, நேற்று புதன்கிழமை(09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூலக் கேள்வியொன்றை எழுப்பிய அவர், இந்தக் கடைகள் உப குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பொருளாதார மத்திய நிலையத்தில், நடி குழு எனப்படும் குழுவானது,விநியோகஸ்தர்களிடமிருந்து கப்பம் பெறுவதாக அவர் தெரிவித்தார். அக்குழுவானது, பொருட்களை விநியோகஸ்தர்களிடமிருந்து குறைந்த விலையில் பெற்று, மூன்று மடங்கு விலைக்கு விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

விநியோகஸ்தர்களின் கண்ணுக்கு முன்னாலேயே, இந்த விடயம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவிக்கையில், பொருளாதார மத்திய நிலையத்தில் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவை தீர்க்கப்படக் கூடியவை என்றும் அவர் கூறினார்.

அத்துடன், இக்கடைகளின் குத்தகையானது பகிரங்க ஏலத்தில் விடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X