2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தமிழின் ‘கதி’யால் கலங்கினார் எம்.பி

Kogilavani   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு, இலங்கையில் அதுவும் கொழும்பில் நேர்ந்த கதியைக் கூறி, ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க கவலைப்பட்டார்.  

நாடாளுமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு அவர், மனவேதனையுடன் கூறியதாவது,   

“கொழும்பு நாரஹேன்பிட்டியவில் உள்ள பிரபல வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன். உள்ளே சென்று பல இடங்களில் பார்வையிட்டேன். 8 மொழிகளில் அறிவிப்புகள் எழுதப்பட்டிருந்தனர்.   

எட்டுமொழிகளை கண்டதும் சந்தோஷப்பட்டேன். எனினும், அந்த எட்டு மொழிகளில் தமிழ்மொழி மட்டும் இல்லாமல் இருந்தது அதிர்ச்சியளித்தது.   

எட்டு மொழிகளின் உரிமைகளை மதிக்கும் அந்த வைத்தியசாலையில் தமிழ்மொழி மட்டும் மறுக்கப்பட்டுள்ளது. இதுதான் தமிழ்மொழியின் இன்றைய நிலை எனினும், அந்த வைத்தியசாலைக்கு பெருமளவில் தமிழர்களே வருகின்றனர்” என்று சுட்டிக்காட்டினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .