2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தமிழில் தேசிய கீதம்: எதிர்த்து வழக்கு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடப்பட்டமையானது  அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அவ்வாறு பாடப்பட்டமையால் அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

களனி கல்பொருள்ளயை வதிவிடமாகக்கொண்ட சன்ஜீய சுதன் பெரேரா, பேலியகொடையை வதிவிடமாகக் கொண்ட பிரதீப் ஆசிரி சொய்சா மற்றும் களனியை வதிவிடமாகக்கொண்ட தொன் பிரேமரத்ன ஆகியோரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X