2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

தமது வீடுகளுக்கு செல்லும் 47 இந்திய மீனவர்கள்

Freelancer   / 2022 பெப்ரவரி 18 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 

சிறையில் அடைக்கப்பட்ட 56 மீனவர்களும் கடந்த மாதம் 25ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். 

விடுதலை செய்யப்பட்ட இந்த 56 மீனவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு கொழும்பில் இந்திய தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 47 மீனவர்களும் இன்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X