2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

தமிழகத்தில் 85 சதவீத வாக்குப்பதிவு: இளைஞர்கள் ஆர்வத்துடன் திரண்டனர்

Freelancer   / 2026 ஏப்ரல் 24 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்​தில் இளைஞர்​கள், பெண்​கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்​களித்​த​தால், வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்​டி​யுள்​ளது. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்​ணிக்கை மே 4 ஆம் திகதி  நடை​பெற உள்​ளது.

இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​த​படி, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் நேற்று ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 14.59 லட்​சம் முதல் தலை​முறை வாக்​காளர்​கள் உட்பட மொத்​தம் 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றிருந்​தனர். இந்​நிலை​யில், தமிழகம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டிருந்த 75,064 வாக்​குச்​சாவடிகளில் வாக்​குப்​ப​திவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்​கியது.

காலை முதலே வாக்​காளர்​கள் ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். வெயிலை தவிர்க்​கும் வித​மாக, காலை 7 மணிக்கே முதி​யோர்​கள் அதிக அளவில் வாக்​குச்​சாவடிகளுக்கு வந்து வாக்​கு​களை செலுத்​தினர். சக்கர நாற்​காலி மூலம் முதி​யோர், மாற்​றுத் திற​னாளி​களை அழைத்​துவர தன்​னார்​வலர்​கள் உதவினர். நேற்று முகூர்த்த நாள் என்​ப​தால் பல்​வேறு பகு​தி​களி​லும் புது​மணத் தம்​ப​தி​கள் மணக்​கோலத்​தில் வந்து வாக்​களித்​தனர்.

காலை முதலே வாக்​குப்​ப​திவு: விறு​விறுப்​பாக நடை​பெற்​றது. காலை 9 மணிக்​குள்​ளாக 17.69 சதவீத வாக்​கு​களும், பிற்​பகல் ஒரு மணிக்​குள் 56.81 சதவீத வாக்​கு​களும் பதி​வாகின. குறிப்​பாக, இளைஞர்​கள், பெண்​கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து அதிக அளவில் வாக்​களித்​தனர். இதனால், தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்டி பதி​வாகி​யுள்​ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .