Freelancer / 2021 டிசெம்பர் 15 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 41 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலத்தில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், அதிக ஆபத்து ஏற்படக்கூடிய 12 நாடுகள் மற்றும் குறைந்த ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஒரு வார காலத்தில் அதிக ஆபத்து ஏற்படும் நாடுகளில் இருந்து வந்த 11 ஆயிரத்து 481 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு குறைந்த ஆபத்து ஏற்படக்கூடிய நைஜீரியா நாட்டில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
அதில் அவருக்கு ‘எஸ் ஜீன் டிராப்’ இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இது ஒமிக்ரோன் தொற்று பாதிப்பின் தொடக்க நிலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் கிண்டி கிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ‘ஏ’வகை தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த 7 பேரின் பரிசோதனை முடிவுகளை விரைந்து அனுப்பி வைக்க அந்த நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. இன்றோ அல்லது நாளையோ பரிசோதனை முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago