Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 12 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இலங்கையின் அரசியல் அதிகார சதுரங்கப் போட்டியில், தமிழர் இரத்தம் தோய்ந்த கரங்களில் இலங்கையின் முழு அதிகாரத்தையும் மீண்டும் வழங்குவதற்குத் திட்டமிட்டு, சதி நாடகத்தை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றிவிட்டார் என்று தெரிவித்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, அவர் தமிழர்களின் முதுகில் மீண்டும் குத்திவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
“2015ஆம் ஆண்டு, ஐ.நா.வின் மனித உரிமைக் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு வாசகத்தைக்கூட நிறைவேற்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டு, ஊடக அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா குழு அறிக்கையை மனித உரிமைகள் பேரவையும் கண்டுகொள்ளவில்லை, இறுதி யுத்தத்தை உடனிருந்து செயல்படுத்திய அன்றைய பாதுகாப்பு பதில் அமைச்சர்தான் இன்றைய ஜனாதிபதி மைத்திரி சிறிசேன ஆவார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 தீர்மானத்தைச் செயல்படுத்துவதாகக் கூறி, இரண்டு ஆண்டுகளாகக் கால அவகாசம் கேட்டு ஒத்திப்போட்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்ஷவும் கரம் கோர்த்துக்கொண்டு இறுதி யுத்தத்தை நடத்தியதைப் போல இப்பொழுது ஜனநாயகப் படுகொலையும் நடத்திவிட்டார்கள்.
கூட்டமைப்பின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷ நாடினார். ஆனால், ஆதரவு தரக் கூட்டமைப்பு மறுத்துவிட்டது. குறுக்கு வழியில் எம்.பி.கள் ஆதரவைப் பெற முடியாமல் போனதால் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை தன்னிடம் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிவித்ததை அடுத்தே, இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ள வைகோ, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நாவிலும், மனித உரிமைப் பேரவையிலும் உலக நாடுகள் குரல்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago