2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’தமிழர்களுக்கு மஹிந்த வழங்கியதை கூட்டமைப்பு பறித்துக்கொண்டது’

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய தனிப்பட்ட நலனையோ அல்லது அவருடைய கட்சி ந​லனையோ கருத்தில் கொள்ளாது, தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த வாக்குரிமையை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பறித்துக்கொண்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஜனநாயகம், மனித உரிமைகள், வாக்குரிமை போன்ற மக்களின் அடிப்படையான உரிமைகள் அனைத்தும் இல்லாது செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கெதிராகவும், தேர்தலை விரைவாக நடத்தக்கோரியும் விரைவில் நாடுமுழுவதிலும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் ​தொடர்பிலும் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வலியுறுத்தி முன்வைக்கப்பட்டுள்ள யோசனை குறித்தும் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கும் 42 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்  நாளை (09) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாட உள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .