2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘தம்மை மதுஷுடன் தொடர்புபடுத்தி வெளிவரும் கருத்துகளை நிராகரிக்கின்றேன்’

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மகனின் திருமண நிகழ்வில் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையின் பாதாளக் குழுவொன்றின் தலைவரான மாக்கந்துர மதுஷ்  கலந்துக்கொண்டிருந்ததாக, பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ள கருத்துக்களை நிராகரிப்பதாக, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பி​லேயே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது மகனிடம் இராஜதந்திர கடவுச்சீட்டு உள்ளதாக கடந்த வாரங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் தான் நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளதுடன், மதுஷின் வசிப்பிடம் மாக்கந்துர இல்லையென்றும் கம்புறுப்பிட்டிய என்ற கிராமமே மதுஷின் வசிப்பிடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .