S. Shivany / 2021 ஜனவரி 10 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய 118 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய சமய பெரியார்கள் ஐந்து பேர் உட்பட ஹெட்டிப்பொலவில் உள்ள அலுவலகத்திற்கு மக்கள் சந்திப்பு தினத்தன்று சமூகமளித்த 75 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும், அமைச்சரின் குடும்ப அங்கத்தவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுயதனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அத்துடன், தயாசிறி ஜயசேகரவின் பிரத்தியேக செயலாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
24 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
7 hours ago
7 hours ago