Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மே 06 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற கண்ணொருவ தாவர மரபணு வள மையத்தின் அபிவிருத்தி அதிகாரி ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிருஷாந்தி குமாரி தசநாயக்க (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கலகெதர மினிகமுவவில் வசிப்பவர் ஆவர்.
திடீரென உடல்நிலையில் எற்பட்ட சுகவீனம், சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
27 minute ago
55 minute ago