2026 மே 19, செவ்வாய்க்கிழமை

dd

தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

Editorial   / 2026 மே 19 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பொது இடங்கள் மற்றும் தெருக்களில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் அச்சமின்றி வாழ்வதற்கு நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு; இதில் அரசாங்கம் ஒரு செயலற்ற வேடிக்கையாளராக இருக்க முடியாது” என்று நீதிமன்றம் இதன்போது திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, தெருநாய்களைக் கருத்தடை செய்த பின்னர், அவை பிடிக்கப்பட்ட அதே இடங்களிலேயே மீண்டும் கொண்டு போய் விடக்கூடாது என்ற தனது முந்தைய உத்தரவை மாற்றியமைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. “கருத்தடைக்கு பின் நாய்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது அவற்றிற்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்தி, மேலும் பல ஆக்ரோஷமான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும்” என விலங்கு நல ஆர்வலர்கள் வாதிட்டனர்.

இருப்பினும், இந்த வாதத்தை நிராகரித்த நீதியரசர்களான விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு பின்வருமாறு தெரிவித்தது:

“குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சர்வதேசப் பயணிகள் தெருநாய்க் கடிக்கு ஆளாகும் கொடூரமான தரைநிலை யதார்த்தங்களை நீதிமன்றம் புறந்தள்ளிவிட முடியாது. குழந்தைகளும் முதியவர்களும் தங்களின் உடல் வலிமையையும், நாய்களின் கருணையையும் நம்பி மட்டுமே வாழ வேண்டியதொரு சமூகத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கவில்லை. எனவே, கடந்த நவம்பர் 7ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பை வாபஸ் பெறக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்.”

பொது இடங்களில் தெருநாய்களின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவது ‘அச்சமூட்டும்’ வகையில் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், இந்திய விலங்கு நல வாரியம் (AWBI) வகுத்துள்ள விதிகளைப் பலப்படுத்தி, அவற்றை முறையாக நடைமுறைப்படுத்த அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசுகள் மீது நீதிமன்றம் அதிருப்தி

முன்னைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறிய மாநில அரசுகளை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

“தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் விகிதத்திற்கு ஏற்ப, அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதில் மாநில அரசுகளின் பங்களிப்பு முற்றிலும் இல்லாமலேயே போயுள்ளது. அரசாங்கங்களின் முயற்சிகள் திட்டமிடல் இன்றியும், தற்காலிகமானவையாகவும் மட்டுமே இருந்துள்ளன. முறையான திட்டமிடல் இன்றி கருத்தடை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவே தற்போதைய அவல நிலைக்குக் காரணமாகும். மாநில அரசுகள் தொலைநோக்குப் பார்வையுடன் செயற்பட்டிருந்தால், இந்த நிலைமை இவ்வளவு தூரம் மோசமடைந்திருக்காது” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

 

நீதிமன்றம் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவுகள்:

1. (AWBI) .

2. (Animal Birth Control) .

3. (Anti-rabies vaccines) (Immunoglobulins) .

4. . , .

2025 நவம்பரில் நடந்தது என்ன?

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மருத்துவமனைகள், பூங்காக்கள், புகையிரத நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றி, அவற்றை தங்குமிடங்களுக்கு (Shelters) கொண்டு செல்லுமாறு அதிகாரிகளுக்குப் பணித்திருந்தது. இந்த நாய்களைக் கருத்தடை செய்த பின்னர், அவை பிடிக்கப்பட்ட இடங்களிலேயே மீண்டும் விடுவிக்கக் கூடாது என்றும், குறிப்பிட்ட சில இடங்களைத் தவிரப் பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதைத் தடை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளுக்கு எதிராகவே விலங்கு நல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

புதுடெல்லி குடியிருப்புப் பகுதி உத்தரவு

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் உடனடியாகத் தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அந்தத் தங்குமிடங்களில் நாய்களுக்குக் கருத்தடை செய்யவும், தடுப்பூசி போடவும் மற்றும் அவற்றைப் பராமரிக்கவும் தகுதியான நிபுணர்கள் இருக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் தெருநாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபடும்போது, அதனைத் தடுக்கும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X