2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

Freelancer   / 2025 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறுகின்றது.

2,787 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் 307,951 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

பரீட்சை தினத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் திடீர் அனர்த்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திடீர் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் 117 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் அளிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் பரீட்சார்த்திகள் 08.30 மணிக்கு பரீட்சை மத்திய நிலையங்களில் அமர வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.

பரீட்சைக்கு தேவையான எழுதுகருவிகள் தவிர்ந்து ஏனைய பொருள்களை எடுத்து செல்வதை தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X