Freelancer / 2022 ஜனவரி 17 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
தனது ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என உறுதியளித்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேதாஸ, இயற்கை குளிர் காற்றை வழங்கினாலும் மக்களின் வயிற்றில் நெருப்பு எரிகின்றது எனவும் இன்று தரித்திரம் தலை விரித்து ஆடுகிறது என்றும் தெரிவித்தார்.
நுவரெலியா மாநகர சபை மைதானத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி, நேற்று (16) ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், .ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக நாட்டில் இனம், மதம் பேதம் முற்றாக இல்லாதொழிக்கப்படும் என தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தான் இனவாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் அஞ்சப் போவதில்லை என்று தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள் வியர்வை சிந்தி, கடுமையாக உழைத்து அந்நிய செலாவணியை கொண்டு வர பாடுபட்ட போதும் அவர்களுக்கு இந்நாட்டில் பிரஜாவுரிமை இருக்கவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமையை வழங்கி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தார் என சுட்டிக்காட்டினார்.
ஆனால், ரணசிங்க பிரேமதாஸவின் மகனான தான், அவர்களை பெருந்தோட்டத் தொழிலாளர்களாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் போராட்டத்தில் இறங்கியுள்ளேன் என்றார்.
நாம் தற்போது தோட்டத் தொழிலாளர்களின் சாசனம் தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம் எனத் தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால கொள்கை விஞ்ஞாபனத்தில் இணைத்து, எதிர்கால ஜனாதிபதியாக தோட்டத் தொழிலாளர்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர்கள் கையில் கேஸ் வெடிப்பதில்லை, அவர்கள் கேஸ் வரிசையில் நிற்பதில்லை. அவர்கள் பசளையின்றி கஷ்டப்படவில்லை. அவர்கள் அரசி, சீனி, எண்ணெய் வரிசைகளில் எப்போதும் நிற்பதில்லை. அவர்களுக்கு ஒரு போதும் பால்மா பிரச்சினையில்லை என்றும் கேள்வியெழுப்பினார்.
காரணம் அவர்களுக்கு அவை எல்லால் அரண்மனைக்கு கொண்டுவந்து கொடுக்கப்படுகின்றது. தயவுச் செய்து விழித்துக் கொள்ளுங்கள். மதவாதம், பிரிவினைவாதத்திற்று மீண்டும் ஏமாற வேண்டாம் என தெரிவித்தார்.
ஆகவே, எமது தாய்நாட்டை கட்டி எழுப்ப அனைவரும் கைகோர்த்து செயற்படுவது அவசியம். இயற்கை குளிர் காற்றை வழங்கினாலும் மக்களின் வயிற்றில் நெருப்பு எரிகின்றது. இன்று தரித்திரம் தலை தூக்கியுள்ளது என குறிப்பிட்டார்.
எதிர்கட்சிக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிறந்த உறவு ஒன்று இருப்பதாகத் தெரிவித்த அவர், அந்த உறவை வலுப்படுத்தி தோட்டத்தொழிலாளர்களின் பொருளாதாரம், வீடமைப்பு, கலாசாரம் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
35 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
35 minute ago
2 hours ago