2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தலைநகரில் தெளிவில்லாத மஞ்சள் கோடுகள்

Gavitha   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரத்தில் உள்ள வீதிகளில் பாதசாரிகள் கடக்கும் பாதசாரி கடவைகளில் உள்ள மஞ்சள் கோடுகள் தற்போது பாதுகாக்கப்படாத நிலையில் தெளிவற்றதாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும், கொழும்பு நகரத்தில் உள்ள சுமார் 50 பாதசாரி கடவைகள் இவ்வாறு கவனிப்பாரற்ற நிலையில், தெளிவில்லாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு குறித்த மஞ்சல் கடவைகள் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளதை வீதி பாதுகாப்பு தெடர்பான தேசிய சபை கண்டறிந்துள்ளது.

அத்துடன், தேவையான இடங்கள் இந்த மஞ்சள் கடவைகள் அமைக்கப்படாமல் உள்ளதாகவும் இதுவே இவ்வாறு அவதானமற்ற நிலைமை ஏற்பட பிரதான காரணம் எனவும் அந்த சபை தெரிவிக்கின்றது.

அதற்கமைய, மஞ்சள் கடவைகளில் ஏற்படும் வாகன விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கா வேலைத்திட்டம் நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற இடங்களில் உள்ள மஞ்சள் கடவைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X