Editorial / 2026 ஜனவரி 06 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

"ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்" என்பது ஒரு பழமொழி. இதன் பொருள், ஒரு புதிய உறவு அல்லது திருமணம் ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் இருக்கும் அதீத விருப்பம் (ஆசை) 60 நாட்களுக்கும், காதல் உணர்வு (மோகம்) 30 நாட்களுக்கும் மட்டுமே நீடிக்கும்; அதன் பிறகு அந்த ஆரம்ப கால உற்சாகம் குறைந்து, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிடும் என்பதேயாகும்.
எனினும், பெண்கள் மீதான மோகத்தால் பலரும் பலவற்றை இழந்துவிடுவார்கள். இதில், ஆண்களை குறிவைத்து சூறையாடும் பெண்களும் இல்லாமல் இல்லை. அந்த வலையில் சிக்கிய பலரும் மீண்டெழ முடியாத நிலைமையில் உள்ளனர். சரி விடயத்துக்கு வரும்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் , மனைவிக்கு தெரியாது எடுத்துசென்ற 9 பவுண் தாலிகொடியை கொழும்பு யுவதி எடுத்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருமணமான வங்கி ஊழியர் ஒருவருக்கு , அவரது நண்பனின் ஊடாக கொழும்பு யுவதி ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அந்த யுவதியுடன் தனித்திருக்க விரும்பி குறித்த வங்கி ஊழியர் மனைவிக்கு தெரியாது அவர்து தாலிகொடொயை எடுத்துகொண்டு கொழும்பு யுவதியுடன் வவுனியா சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வங்கி ஊழியர் கண் அயர்ந்த நேரத்தில் கொழும்பு யுவதி, வங்கி ஊழியரிடம் இருந்த தாலிக்கொடியை எடுத்துகொண்டு தப்பிவிட்டார்.
கண் விழி்த்த பின்னரே வங்கி ஊழியருக்கு , கொழும்பு யுவதி தாலிகொடியுடன் மாயமாகியமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து நண்பனுடன் யுவதியை தேடியபோதும் அவர்களால் கொழும்பு யுவதியை கண்டுபிடிக்க முடியவில்லை.
நண்பருக்கு இரவல் கொடுத்ததாக கணவன் சமாளித்தபோதும், தொடர்ந்து இழுத்தடிப்பு செய்ததால், நண்பனின் வீடு சென்று மனைவி அது தொடர்பில் வினவியபோதே நடந்த சம்பவம் அம்பலமானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .