Editorial / 2020 நவம்பர் 06 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, டி.கேதீஸ், எஸ்.சதிஸ், எஸ்.கணேசன்
தலவாக்கலை நகரசபைக்கு உட்பட்ட மீடில்டன் பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
அதனையடுத்து, அப்பெண்ணுடன் நெருங்கி பழகிய 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அப்பெண்ணின் உறவினர் ஒருவர் கொழும்பிலுள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். அவரும், அப்பெண்ணும் கடந்த 16 ஆம் தலவாக்கலை மிடில்டன் வீட்டுக்கு வந்துள்ளனர்.
ஹோட்டலில் வேலைசெய்த நபர், மீண்டும் கொழும்புக்கு சென்றுவிட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.
அவர், சிலாபம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டதுடன் கொழும்பு, கோட்டை பொலிஸாரினால் தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலுக்கமைய தலவாக்கலை மிடில்டனில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு பொது சுகாதார பரிசோதகர்களினால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போதே, கொழும்பிலிருந்து வந்த பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது,
இந்த பெண் வத்தளையிலுள்ள அடைத்தொழிற்சாலையில் வேலை செய்தவர் என்றும் தொற்றுக்குள்ளான பெண்ணை மாத்தறை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
“அப்பெண்ணுடன் தொடர்புடைய உறவினர், அயலவர்கள் என 13 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என கொட்டகலை சுகாதர பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.
22 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
4 hours ago
4 hours ago