2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

Freelancer   / 2022 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தானை - கப்புவத்த பகுதியில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

பெண் ஒருவர் நடத்தும் ஹோட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் உணவு வாங்கிவிட்டு பணம் கொடுத்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் குறித்த நபர் ஹோட்டல் உரிமையாளரின் தந்தையை பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ராகம பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X