Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Mayu / 2023 நவம்பர் 30 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தப்பு செய்தால் தான் தண்டணை, அபாராதம் விதிக்கப்படும் என கேள்விப்பட்டிருப்போம் ஆனால் தப்பே செய்யாமல் இளைஞன் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது அதற்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்கின்றார்கள்!!!
இந்தியா தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக காணப்படுகிறது..
அந்தவகையில் தற்போது சபரிமலை பருவம் ஆரம்பித்துள்ளதால் பயணிகளின் வருகை முன்பை விட அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இருக்கையில் குற்றாலம் பகுதியில் வித்தியாசமான உருவம் கொண்ட தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து வலம் வந்த இளைஞனொருவருக்கு பொலிஸாரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டும் தெரிவித்துள்ளனர். பொதுவாக நகைகள் கொள்ளை, வழிப்பறி, கொள்ளை, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள்தான் தங்களின் முகம் வெளியில் தெரியாமல் இருக்க இதுபோன்ற தலைக்கவசத்தை (ஹெல்மெட்) பயன்படுத்துவார்கள்.
அதற்கமைய, குறித்த இளைஞன் ஏதேனும் குற்ற செயலை செய்யத்தான் இது போன்று தலைக்கவசத்தை (ஹெல்மெட்) அணிந்து சுற்றி வருகிறாரோ என்று பொதுமக்கள் பொலஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இளைஞரை பொலஸ்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் வெறுமென பொழுதுபோக்குக்காகத்தான் இதுபோன்ற தலைக்கவசத்தை (ஹெல்மெட்) அணிந்திருந்ததாகவும், வேறு எந்த நோக்கமும் இல்லையென்றும் இளைஞர் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து அவருக்கு மோட்டார் வாகன சட்டப்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago