2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தவ்ஹீத் ஜமாஅத்தின் மனுவை பரிசீலிப்பதற்குத் தீர்மானம்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் மற்றும் செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மார்ச் மாதம் 15ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு, உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்தியாவிலிருந்து நாட்டுக்குள், இஸ்லாமியத் தலைவர்களை அழைத்துவருவதற்கு இடையூறு விளைவித்தமை, தங்களுடைய அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். ஆகையால், அதற்கு நட்டஈடாக, 50 இலட்சம் ரூபாயை வழங்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, பிரதம நீதியரசர் கே.என் ஸ்ரீபவன், நீதியரசர்களான புவனே அலுவிஹார மற்றும் அனில் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமையன்று எடுக்கப்பட்டபோதே, மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது.

மனுவில், பிரதிவாதிகளாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், குடிவரவு மற்றும் குடியகல்வு நிர்வாகி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அல் குரான் புத்தக வெளியீடு, சுகததாஸ உள்ளக அரங்கில், கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி இடம்பெறவிருந்தது. அந்த வெளியீட்டு வைபவத்துக்கு, இந்தியா, தமிழ் நாட்டிலிருந்து இஸ்லாமிய தலைவர்களான ஹனிபா மொஹமட் யூசுப் உள்ளிட்ட மூவரை அழைத்துவருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், அந்த மூவருக்கும் விசா வழங்குவதை இரத்துச்செய்யுமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு நிர்வாகிக்கு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கட்டளையிட்டிருந்ததார் என அறியமுடிகின்றது. இதனை எதிர்த்தே, இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X