Editorial / 2026 ஜனவரி 23 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) காலை கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெற்றார்.
இந்த விஜயத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய திப்போட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார், பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்தார்.
இந்த சந்திப்புகளின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து மகாநாயக்க தேரர்களுடன் விக்ரமசிங்க கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அரசியல் விஷயங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது, விக்ரமசிங்க அவர்களின் கேள்விகளுக்கு “இனி தீவிர அரசியலில் நான் ஈடுபடவில்லை“ என சுருக்கமாக பதிலளித்தார்.
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago