Thipaan / 2017 செப்டெம்பர் 27 , மு.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
2008 ஆம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், தமிழர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க
உட்பட அறுவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பான விசாரணை, நவம்பர் 10ஆம் திகதி இடம்பெறும் என, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (26) அறிவித்தது.
தெஹிவளையில் வைத்து ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாணவர்களும், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன்,
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆரச்சி, திருகோணமலையைச் சேர்ந்த கனகராஜா ஜெகன், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேர், 2008, 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடத்தப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க உட்பட எழுவருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
நடராஜா ரவிராஜ் வழக்கில், பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட ஜூரி சபையால் விடுவிக்கப்பட்ட, கடற்படைக் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியும் இதில் ஒரு சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவருக்குப் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறுவரினாலும், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு, மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக முன்னிலையில், நேற்று (26) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனு தொடர்பான விசாரணை நடத்தப்படுவதற்காக தினமாக, நவம்பர் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
43 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago