2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’தாக்குதலுடன் அரசாங்கம் தொடர்பில்லை’

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ்வரி விஜயனந்தன்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களின் மீதான இராணுவம் மற்றும் பொலிஸாரின் தாக்குதலின் பின்னணியில் அரசாங்கம் எந்த விடயத்திலும் தொடர்புபடவில்லை என தெரிவித்த அமைச்சரும்,  இணைப் பேச்சாளருமான மஹிந்த அமரவீர, பொதுமக்களினதும் பொதுச் சொத்துக்களின் பாதுகாப்புக்காக மாத்திரமே இராணுவத்தினரும் பொலிஸாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (5) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

குருநாகல் பிரதேசத்தில் இராணுவ அதிகாரியொருவர் நபர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் விரிவாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என தெரிவித்த அவர், அண்மைக் காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நடைபெறும் சம்பவங்களானது சட்டவிரோதமாக எரிபொருளை சேகரிப்பவர்களால் முன்னெடுக்கப்படுகிறது, குருநாகல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நபரும் அவ்வாறான ஒருவர் என்றே தெரிய வருகிறது என்றார். 

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தீ உள்ளிட்டவைகளால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும். அவற்றைத் தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் அதிகாரங்கள் அடாவடிக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் பாதாள குழுவினர் தொடர்புபட்டுள்ளனர். 

நாட்டில் எரிபொருள்  இல்லையென்று கூறினாலும் பல இடங்களில் சட்டவிரோதமாக சேகரிக்கப்படும் எரிபொருள் தொகை கைப்பற்றப்படுகின்றன. இவ்வாறு சேகரிப்பவர்கள் தான் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

அதனை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை. 

இவ்வாறு வெளிவரும் காணொளிகளின் ஒரு காட்சிகளையே நாம் பார்க்கின்றோம். மறுபுறம் என்ன நடக்கிறது என்பது தெரியாது. எனவே காணொளிகளை வெளியிடும் போது ஆரம்பம் தொடக்கம் என்ன நடக்கிறது என்பதனையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பாதுகாப்பு பிரிவினர் மீதும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்படுகின்றன. அது தொர்பிலும் ஊடகங்கள் கதைக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .