Freelancer / 2023 மார்ச் 31 , மு.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து முதலாம் ஆண்டு மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
23, 24 மற்றும் 25 வயதுடைய தெஹிவளை, மொரட்டுவை, அம்பலாங்கொடை, வெலிமடை ஆகிய
பகுதிகளை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களைத் தாக்கி காயப்படுத்திய தாக குற்றம் சுமத்தப்பட்ட குறித்த நால்வரும் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (29) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி சபரகமுவ பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்து புதிய மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்ததுடன் சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பெப்ரவரி 16ஆம் திகதியுடன் முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago