2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தாக்குதல்களை முறியடிக்க புதிய படையணி

Editorial   / 2018 நவம்பர் 19 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை இராணுவம் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மீது மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு இணையத்தள தாக்குதல்களில் இருந்தும், எந்நேரத்திலும் நாட்டை பாதுகாப்பதற்காகவே இந்த படையணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களிலும், இந்த படையணியின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வேண்டும் என, அண்மையில் ஐ.தே.கவினர் அந்நிறுவனத்துக்கு எழுத்துமூல கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .