2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தாயின் இறுதிச் சடங்கில் இஷாரா செவ்வந்தியின் சகோதரன்

Freelancer   / 2025 ஜூலை 15 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் சகோதரன் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (11) இஷாரா செவ்வந்தியின் தாயார் மாரடைப்பு காரணமாக  வெலிக்கடை சிறைச்சாலையினுள் உயிரிழந்தார். 

இஷாரா செவ்வந்தியின் தாயாரின் சடலம் கந்தானை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட நிலையில் அவரது இறுதிச் சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது.

இதனால் அப்பகுதியைச் சுற்றி பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சிறைச்சாலையில் உள்ள இஷாரா செவ்வந்தியின் சகோதரன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .